உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மணப்பள்ளி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

மணப்பள்ளி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

மணப்பள்ளி வரதராஜ பெருமாள் கோவிலில்புரட்டாசி 2ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுமோகனுார், செப். 29-புரட்டாசி, இரண்டாவது சனிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மோகனுார் தாலுகா, மணப்பள்ளியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஆலயத்தில், மூலவருக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, துளசி மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.மோகனுார் அடுத்த வளையப்பட்டியில் உள்ள பத்மாவதி மஹாலக்ஷ்மி தாயார் சமேத ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், மூலவர் பிரசன்ன வெங்கட் ரமண பெருமாளுக்கும், பத்மாவதி மகாலட்சுமி தாயாருக்கும் பால், தயிர், திருமஞ்சனம், கஸ்துாரி மஞ்சள், பச்சரிசி மாவு கரைசல், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மோகனுார் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் சுவாமி குருவாயூரப்பன் அலங்காரத்தில் எழுந்தருளினார்.தோளூர் சருவ மலையில் உள்ள ரங்கநாத சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகளுக்கும், பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.* ஏகாதசியுடன் கூடிய புரட்டாசி, 2ம் சனிக்கிழமையையொட்டி, நேற்று மல்லசமுத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகுசவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சுவாமி மல்லிகை புஷ்பங்கி சேவையில் அருள்பாலித்தார். பக்தர்கள் நெய்தீபமேற்றி கோவிலை சுற்றி வந்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் உள்ள வேணுகோபால பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை