உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

நாமக்கல், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப்போட்டி நடந்தது. ஆறு முதல் பிளஸ் -2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரையும்; கல்லுாரி மாணவர்களுக்கு, மதியம், 1:30 மணி முதலும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்(பொ) ஜோதி தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியே மாவட்ட அளவில் முதல் பரிசு, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் இருவரை தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை