உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கணவாய் ஆஞ்சநேயர் கோவில் முன் நில், கவனி, செல் எச்சரிக்கை வாசகம்

கணவாய் ஆஞ்சநேயர் கோவில் முன் நில், கவனி, செல் எச்சரிக்கை வாசகம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த கணவாய் ஆஞ்சயேர் கோவில் முன் உள்ள சாலையில், பாதுகாப்பு பயணம் மேற்கொள்ள, 'நில், கவனி, செல்' என, பெயின்ட்டால் எச்சரிக்கை வாசகம் எழுதியுள்ளனர்.நாமகிரிப்பேட்டை, மெட்டாலா கணவாயில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஆத்துார் பிரதான சாலையில் உள்ள இக்கோவில் வழியாக செல்லும் அனைத்து தனியார் வாகனங்களும், நின்று சுவாமி தரிசனம் செய்து விட்டு தான் செல்வார்கள். இதனால், இப்பகுதியில், காலை முதல் இரவு வரை எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அதேபோல், மெட்டாலா கணவாய் மேட்டில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதனால், 'பேரிகார்டர்' வைத்து விபத்தை குறைத்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த வாரம் ஆஞ்சநேயர் ஜெயந்தி நடக்கும் நிலையில், தற்போது, கோவில் முன் தன்னார்வலர்கள் சிலர், 'நில், கவனி, செல்' என்ற எச்சரிக்கை வாசகத்தை பெயின்ட்டால் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் வேகமாக வரும் வாகனங்கள் நின்று செல்லும் என தன்னார்வலர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை