உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் குறித்து ஆய்வு

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் குறித்து ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் பகுதியில், சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை, மாதேஸ்வரன் எம்.பி., பார்வையிட்டு மேம்பாலங்கள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் வழியாக செல்லும், சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட சில இடங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. மேலும் பல இடங்களில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்லவும், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லவும், பொதுமக்கள் சாலையை கடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து, இருபக்கமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இதையொட்டி, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கருங்கல்பாளையம், பொம்மைகுட்டைமேடு, பெருமாள்கோவில்மேடு, புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் பகுதி, உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பது குறித்து, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ