நாமக்கல்: நாமக்கல்லில் நில எடுப்பு டி.ஆர்.ஓ.,விடம், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர், 41 ஆவணங்கள் சமர்ப்பித்தனர்.மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்-பட்டி, அரூர், பரளி பகுதியில் உள்ள, 806 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க தமிழகரசு அரசாணை வெளியிட்டது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், நீர்த்தேக்க குட்டைகள், சிறு ஓடைகள், தடுப்பணைகள் உள்ளிட்டவைகளை மறைத்து மேய்ச்சல் புறம்போக்கு என, வருவாய்த்துறை-யினர் அரசுக்கு ஆவணங்களை அனுப்பி அப்பகு-தியில் சிப்காட் அமைக்க முயற்சிப்பதாக கூறி, தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் நுாற்றுக்கு மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்-றனர்.சில நாட்களுக்கு முன் சிப்காட் அமைக்க விவ-சாய நிலங்களை அளவீடு செய்வதற்காக வருவாய் துறையினர் சென்றபோது அவர்களை அப்பகுதி விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, நேற்று முன்தினம் நில எடுப்பு டி.ஆர்.ஓ., விவசாயிகளை அழைத்து பேச்சு-வார்த்தை நடத்தினார். அப்போது, சிப்காட் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை அர-சாணை, நீதிமன்ற உத்தரவுகளை மீறி தங்களது விவசாய நிலங்களை அரசு அதிகாரிகள் தவறான ஆவணங்கள் மூலம் கையகப்படுத்த முனைப்பு காட்டுவதாகவும் இதற்கு தாங்கள் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டோம் எனக்கூறி சென்றனர்.இதையடுத்து, 2ம் நாளாக, நேற்று சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் நில எடுப்பு, டி.ஆர்.ஓ., கண்-ணனை சந்தித்து சிப்காட் அமைப்பதற்கான வழி-முறை அரசாணை, நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட, 41 ஆவணங்களை வருவாய் அலுவலர்களிடம் வழங்கினர். மேலும் தங்களது விவசாய நிலங்-களை ஒருபோதும் சிப்காட் அமைக்க வழங்க மாட்டோம் எனவும் வலியுறுத்தினர்.