உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் அவதி

உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் அவதி

நாமக்கல்:நாமக்கல் அடுத்த உத்தமபாளையத்தில், தார் சாலை பணிக்காக ஜல்லி கற்கள் மட்டும் போடப்பட்டுள்ளால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.நாமக்கல் நகராட்சி, 1 வது வார்டில் உத்தமபாளையம், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அப்பகுதி உள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் அங்கிருந்து, பெரியூர் செல்லும் சாலையை புதிப்பிக்க பழைய சாலையில் பெரும் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. அப்பணி துவக்கி கிட்டத்தட்ட ஒரு மாதமாகும் நிலையில், ஜல்லியில் தார் ஊற்றி புதுப்பிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.அதனால் அப்பகுதி மக்களும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி