உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு

தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு

நாமக்கல், தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார், பிரசார செயலாளர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாறுதல் செய்ய வேண்டும். ஒரே அலுவலகத்தில் பணி மாற்றம் செய்பவர்களை விபரங்களின் அடிப்படையில், பணி மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின், 2024-25ம் ஆண்டிற்கான துணை தாசில்தார் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. 2025--26 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. சங்கத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை