| ADDED : டிச 30, 2025 05:06 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் வாசவி சங்கம் போர்ட் டவுன் சார்பில், விடுமுறை நாட்களில் தன்னார்வ ஆசிரியர்கள், சக ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் பணித்திறன் மேம்பட, கருத்தாளர்களாக தொடர்ந்து செயல்பட்டு வருவதை அங்கீகரிக்கும் வகையில், 'கற்பித்தல் சமூகத்தின் துாண்' விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் கருத்தாளர்கள், அறிவியல், கற்றல் தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த அடிப்படையில் கற்பித்தல், பொருள்களை உருவாக்குதல், கல்வி சார் அலைபேசி செயலி-களை உருவாக்குதல். தேசிய மற்றும் வருவாய் திறனறி தேர்வுகளுக்கு பயிற்சி கொடுத்தல், பறவை அவதானித்தல் மற்றும் இனங்கண்டறி-தலில் பயிற்சி கொடுத்தல். ஆங்கிலத்தில் பேசு-தலில் பயிற்சி, வார்லி ஓவிய பயிற்சி, களிமண் பொம்மை செய்வது குறித்த பயிற்சிகளை ஆசிரி-யர்களுக்காக ஆசிரியர்களே, தன்னார்வ கருத்தா-ளர்களாக செயல்பட்டு, விடுமுறை தினங்களில் கொடுத்து வருகின்றனர். இந்த ஆசிரியர் கருத்தா-ளர்களை அங்கீகரிக்கும் வகையில், 'கற்பித்தல் சமூகத்தின் துாண்' விருது, 15 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், துணை முதல்வர் சந்தோஷம், வாசவி சங்கம், நாமக்கல் போர்ட் டவுனின் தலைவர் நாக ஹரீஷ்குமார், மாவட்ட ஆளுனர் வெங்கடேஷ்வர குப்தா, விரி-வுரையாளர் வேதராஜபால்சன் உள்பட பலர் பங்-கேற்றனர்.