உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாய்க்காலின் கடைசி எல்லையான தேக்குமடைக்கு வந்தடைந்த தண்ணீர்

வாய்க்காலின் கடைசி எல்லையான தேக்குமடைக்கு வந்தடைந்த தண்ணீர்

பள்ளிப்பாளையம்: மேட்டூர் அணையிலிருந்து கிழக்குகரை வாய்க்கால் துவங்கி, சேலம், நாமக்கல் மாவட்ட வழியாக சென்று, 40 மைல் துாரமான பள்ளிப்பாளையம் அருகே, காந்தி நகர் பகுதியில் முடிவடைகிறது.வாய்க்காலின் கடைசி பகுதியான காந்தி நகரில் தேக்குமடை அமைத்து, தண்ணீர் தேக்கி வைக்கப்படும். பிரதான வாய்க்காலில் இருந்து, ஆங்காங்கே கிளை வாய்க்கால் பிரிகிறது. பாசனத்திற்கு தண்ணீர் வரும்போது, மதகு வழியாக கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு, வயல்வெளிகளின் கடைமடை வரை பாசனத்திற்கு தண்ணீர் செல்லும்.அதன் பின், கடைசி எல்லையான பள்ளிப்பாளையம் அருகே, காந்திநகர் பகுதியில் உள்ள தேக்குமடைக்கு தண்ணீர் வந்து சேரும். அதன்படி கடந்த, 30ல், வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடைசி எல்லையான பள்ளிப்பாளையம் அருகே, காந்தி நகரில் உள்ள தேக்குமடைக்கு, நேற்று காலை, 8:00 மணிக்கு தண்ணீர் வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை