| ADDED : ஜூன் 22, 2024 12:27 AM
நாமக்கல்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக உயிரிழந்த சம்பவத்தையடுத்து, இதனை தடுக்க தவறிய தமிழக அரசு மற்றும் போலீஸ் துறையை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் சிவச்சந்திரன் தலைமை வகித்தார். அதில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பிற்கு காரணமான போலீஸ்துறை மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள கஞ்சா, குட்கா, போதை மாத்திரை, சந்துக்கடை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, மாவட்ட போலீஸ் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.