மேலும் செய்திகள்
நாமக்கல் நகர பா.ஜ., தலைவர் தேர்வு
28-Dec-2024
நாமக்கல்: பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ரகோத்தமன் வரவேற்றார். கூட்டத்தில், வரும், 15ல் திருவள்-ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடுவது, உறுப்பினர்களக்கு, 'புற-நானுாறு நுால்' வழங்க வேண்டும். திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும்.மாணவர்கள், ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன் இருக்க, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு எடுக்க பாட-வேளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.நாமக்கல் மாநகராட்சியின் முக்கிய தெருக்கள் மற்றும் சாலைக-ளுக்கு, தேசிய தலைவர்கள் பெயர்களையும், நாட்டுக்கு உழைத்த நல்லோர் பெயர்களையும் சூட்ட வேண்டும் என்பன உள்பட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, பேரவையின் இணை செயலாளராக மதியழகன், பொருளாளராக தமிழாசிரியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
28-Dec-2024