உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரங்கநாதர் கோவிலில் 53ம் ஆண்டாக திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி நிகழ்ச்சி

அரங்கநாதர் கோவிலில் 53ம் ஆண்டாக திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி நிகழ்ச்சி

நாமக்கல்: நாமக்கல்லில், இந்து சமய பேரவையின், திருப்பாவை குழு சார்பில், 53ம் ஆண்டாக திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி நிகழ்ச்சி நடந்தது.நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஆன்மிக இந்து சமய பேரவையின், திருப்பாவை குழு சார்பில், மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேபோல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை, 5:00 மணிக்கு பக்தர்கள் கையில் விளக்கேந்தி மலைக்கோட்டையை வளம் வந்து சுவாமியை வழிபாடு நடத்துவர். அதன்படி, 53ம் ஆண்டாக, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாராயணம் மற்றும் கூட்டுவழிபாடு நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, உலக நன்மை வேண்டி அரங்கநாதர் கோவில் வளாகம் மற்றும் படிவாசலில் பக்தர்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். பின், கூடாரவல்லி உற்சவ விழா நடந்தது. அங்கு, அலங்கரிக்கப்பட்ட மலர் பந்தலில், அரங்கநாதர் சமேத அரங்கநாயகி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பாவை நோம்பு கடைப்பிடிக்கும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை