உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரங்கநாதர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்

அரங்கநாதர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்

நாமக்கல் : நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, நாமகிரி தாயார் கோவில், 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி கோவில், அரங்கநாதர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருத்தேரோட்ட பெருவிழா வெகுவிமரிசையாக நடக்கும். அதன்படி கடந்த, 18ல் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாள் நடக்கும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண விழா, நேற்று இரவு, நாமக்கல் நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் நடந்தது.நரசிம்மர், அரங்கநாதர் சுவாமியுடன், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்கி, திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர்.நாளை காலை, 8:45 மணிக்கு நரசிம்மர் சுவாமி கோவில் திருத்தேரோட்டமும், மாலை, 4:30 மணிக்கு அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் திருத்தேரோட்டமும் நடக்கிறது, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி