மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
நாமக்கல் : 'வரும், 28ல் டில்லியில் நடக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக கூட்டத்தில், புதிய அணை கட்ட கேரள அரசுக்கு அனுமதி வழங்க கூடாது' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 1895 முதல் இன்று வரை முல்லை பெரியாறு அணையால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய, ஐந்து மாவட்டங்களில் உள்ள, இரண்டு லட்சத்து, 8,144 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலுார், கம்பம், சின்னமனுார் மற்றும் தேனி -அல்லிநகரம் ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும், இந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலிருக்கும் டவுன் பஞ்.,கள், கிராம பஞ்., மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.மேலும், மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையையும், உசிலம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கான தனி குடிநீர் திட்டம் மூலம், இப்பகுதிகளின் குடிநீர் தேவையையும், தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.தமிழகத்திற்கு சொந்தமான இந்த அணை, கேரள மாநில எல்லையில் உள்ளதால், இந்த அணை பலகீனமாக இல்லை என்று கூறியும், இதற்கு மாற்றாக கேரள மாநில அரசு தனது சொந்த செலவில், புதிய அணை கட்ட அனுமதி கோரியும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளது.கேரளா அரசு புதிய அணைக்கட்ட அனுமதி வழங்கப்பட்டால், தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில், விவசாய விளை நிலங்கள் பாசன வசதி இன்றி பாலைவனமாக மாறும் சூழல் ஏற்படும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து உயர்த்த கோரி அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து போது, 'அணை உறுதியாக இல்லை' என, தவறான கருத்தை கேரளா அரசு தெரிவித்தது. தொடர்ந்து, வல்லுனர் குழுவை அமைத்து அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய, உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.அணையை ஆய்வு செய்த வல்லுனர் குழு, முல்லைப் பெரியாறு அணை மிகுந்த உறுதியுடன் இருப்பதை உறுதி செய்தது. அதையடுத்து, 2014 மே, 7ல் அணை நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்திக் கொள்ள உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது. அணை உறுதியாக இருக்கும் இச்சூழலில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் மதிப்பளிக்காமல், வெறும் அரசியல் ஆதாயங்களுக்காக, கேரள மாநில அரசு தற்போது அணை உறுதியாக இல்லை என கூறி, புதிய அணை கட்ட அனுமதி கோரியுள்ளது. வரும், 28ல் டில்லியில் நடக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக கூட்டத்தில், புதிய அணை கட்ட கேரள மாநில அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
05-Oct-2025
05-Oct-2025