உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வடை மாலை சாத்தக்கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

வடை மாலை சாத்தக்கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு, வடை மாலை சாத்தக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 10 ஆண்டுகளாக ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்துப்படி நடைபெறுகிறது. இந்நிலையில், வரும், 11ம் தேதி நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில், ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்துப்படி இல்லை என்ற தகவல் கோவில் நிர்வாகம் மூலம் வெளியானது. இதை கண்டித்து பா.ஜ.,-இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நேற்று ஆஞ்சநேயர் கோவில் முன், ஒரு லட்சத்து எட்டு வடை மாலை கட்டாயம் நடத்த வேண்டும் என, இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாநில செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள் கோவில் உதவி ஆணையரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து கோவில் முன் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !