உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

நாமக்கல்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்-கத்தின், நாமக்கல் மாவட்ட மையம் சார்பில், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில உயர்மட்ட ஆலோசனைக்-குழு உறுப்பினர் அன்புராஜ், மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன், பொருளாளர் ராஜா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதில், கிராம நிர்வாக அலுவலகங்களை நவீன மய-மாக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்க-ளுக்கான கல்வி தகுதியை பட்டப்படிப்பாக மாற்-றியமைக்க வேண்டும். பதவி உயர்வில், 30 சத-வீதம் என்பதை, 50 சதவீதமாகவும், காலவ-ரம்பை, 6 ஆண்டுகளில் இருந்து, 3 ஆண்டுகளா-கவும் மாற்றிட வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேர்வுநிலை, சிறப்பு நிலை கிராம நிர்-வாக அலுவலர்களுக்கு, அந்தஸ்துக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை