நலவாரிய உறுப்பினர் 1.50 லட்சம் பேருக்கு ரூ.150 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கல்
நாமக்கல்: ''மாவட்டத்தில், 1.50 லட்சம் நலவாரிய உறுப்பினர்களுக்கு, 150 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்-கப்பட்டுள்ளது,'' என, நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கட்டுமான தொழிலா-ளர்கள் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரிய செயல்-பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்-கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதா-வது:நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில், 1,78,165 பேர், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில், 21,317 பேர், தமிழ்-நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில், 1,37,723 பேர் என, மொத்தம், 3,37,205 பேர் பதிவு செய்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்களை நல-வாரியத்தில் பதிவு செய்யும் வகையில், 49 முகாம்கள் நடத்தப்-பட்டு, 189 வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்-பட்டுள்ளனர். மேலும், இணையம் சார்ந்த 'கிக்' தொழிலாளர்-களை நலவாரியத்தில் பதிவு செய்யும் வகையில், 19 சிறப்பு பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு, 68 தொழிலாளர்கள் உடலு-ழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்க-ளுக்கு, 1,26,917 பேருக்கு, 28.80 கோடி ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை, 19,589 பேருக்கு, 109.08 கோடி ரூபாய் மதிப்பில் ஓய்வூதியம், 9 பேருக்கு, 1.11 லட்சம் ரூபாய் மதிப்பில் குடும்ப ஓய்வூதியம், 1,845 பேருக்கு, 6.98 கோடி ரூபாய் மதிப்பில் இயற்கை மரணம் உள்பட, 1,50,852 பேருக்கு, 150 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்-டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.தனித்துணை கலெக்டர் பிரபாகரன், தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா உள்பட பலர் பங்கேற்றனர்.