உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.8.17 லட்சத்தில் நலத்திட்டம்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.8.17 லட்சத்தில் நலத்திட்டம்

நாமக்கல் :நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி, மொத்தம், 385 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, கூட்டுறவுத்துறை சார்பில், நான்கு பேருக்கு, 7.85 லட்சம் ரூபாய் பயிர்க்கடன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இரண்டு பேருக்கு, தலா, 15,750 ரூபாய் வீதம், 31,500 ரூபாய் மதிப்பில், சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, என மொத்தம், ஏழு பேருக்கு, 8.17 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை