உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அங்காளம்மனுக்கு மஞ்சள் கயிறு அலங்காரம்

அங்காளம்மனுக்கு மஞ்சள் கயிறு அலங்காரம்

ராசிபுரம்: ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும் நேற்று, ஆவணி அவிட்டம், பவுர்ணமியையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மஞ்சள், சிவப்பு கயிறுகளால் அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி