| ADDED : நவ 22, 2025 02:28 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை, கம்பிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவி, சில நாட்களுக்கு முன்பு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வரவில்லை. இதையடுத்து மாணவியின் தாத்தா, தன் பேத்தியை காணவில்லை என, நாமகிரிப்பேட்டை போலீசில் புகாரளித்தார். விசாரணையில், நாமகிரிப்பேட்டை அடுத்த வடுகம் நடுவீதியை சேர்ந்த குமார் மகன் விஷ்வா, 19, மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிந்தது.மாணவி மற்றும் விஷ்வாவை போலீசார் மீட்டு வந்தனர். மாணவிக்கு விஷ்வா பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து இவ்வழக்கு ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மகளிர் போலீசார், மாணவியை நாமக்கல் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். விஷ்வா மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.