உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மன நோயாளிகளை காப்பகங்களில் சேர்க்காவிட்டால் வழக்கு :நாள்தோறும் அதிகரிக்குது பிரச்னைகள்

மன நோயாளிகளை காப்பகங்களில் சேர்க்காவிட்டால் வழக்கு :நாள்தோறும் அதிகரிக்குது பிரச்னைகள்

ஊட்டி : 'நீலகிரியில் சுற்றித்திரியும் மன நோயாளிகளை காப்பகங்களில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டு உள்ளது; தவறும் பட்சத்தில் பொது நல வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசமாக உள்ளதால், வெளி மாநிலங்கள், மாவட்டங்களின் மன நோயாளிகளை அவர்களது உறவினர் இங்கு அழைத்து வந்து விட்டு சென்று விடுகின்றனர். இந்த மன நோயாளிகள் ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றி திரிகின்றனர். பலர் நடந்தே முதுமலை உட்பட அடர்ந்த வனப்பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர். அங்கு வன விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கின்றனர்.இந்நிலையில் இவ்வாறு சுற்றி திரியும் மன நோயாளிகளை காப்பகங்களில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு சுற்றி திரியும் மன நோயாளிகளை காப்பகங்களில் அனுமதிக்காவிட்டால் பொது நல வழக்கு தொடர போவதாக ஊட்டியை சேர்ந்த வக்கீல் ஜீவராஜ் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய கம்யூ.,வின் ஊட்டி நகர கமிட்டி கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டியில் நடந்த இந்திய கம்யூ.,வின் ஊட்டி நகர கமிட்டி கூட்டத்துக்கு பொருளாளர் வீரப்பத்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், 'சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை ஏற்படுத்தும் வகையில் மன நோயாளிகள் மற்றும் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் சுற்றி திரிகின்றனர். இவர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் காப்பகங்களில் அனுமதிக்க வேண்டும். பிச்சையெடுக்கும் சிறுவர்களை பள்ளியில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது. இதில், நகர செயலாளர் ஜெயகுமார், துணை செயலாளர் நாகராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை