மகள் மாயம்; தாய் புகார்
மகள் மாயம்; தாய் புகார்பவானி:அம்மாபேட்டை அருகே பி.கே.புதுாரை சேர்ந்தவர் கற்பகம், 36; தனியார் நிறுவன ஊழியர். திருமணமாகி மகன், மகள் உள்ளனர். 16 வயதான மகள், அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து விட்டு வீட்டில் உள்ளார். நேற்று முன்தினம் கற்பகம் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மகள் இல்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தபோது, ஈரோட்டில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். ஈரோட்டில் உறவினர்கள் இல்லாத நிலையில், பொய் கூறிவிட்டு மகள் மாயமானது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். கற்பகம் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், சிறுமியை தேடி வருகின்றனர்.