| ADDED : ஏப் 21, 2024 01:30 AM
ஊட்டி:நீலகிரி லோக்சபா தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைத்து 'சீல்' வைக்கப்பட்டது. ஜூன், 4ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. இதற்காக ஊட்டி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் 'ஸ்ட்ராங் ரூம்' வசதி ஏற்படுத்தப்பட்டது. இதில், நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர் மற்றும் அவிநாசி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில் முடிவுற்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டு 'ஸ்ட்ராங்' ரூமில் வைக்கப்பட்டது. நேற்று, மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர், மஞ்சித் சிங் பரார் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஓட்டு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங்' ரூமில் பாதுகாப்பாக வைத்து 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகத்தை சுற்றி, 160 சி.சி.டி.வி., கேமரா, 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.