உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒன்றரை மணி நேரத்தில் அரசூரில், 37 மி.மீ., மழை

ஒன்றரை மணி நேரத்தில் அரசூரில், 37 மி.மீ., மழை

சூலூர்: அரசூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றரை மணி நேரத்தில், 37 மி.மீ., மழை பெய்தது.சூலூர் அடுத்த அரசூர் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மதியம், 1:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. சுமார், ஒன்றரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், மழை நீர் பெருக்கெடுத்தது. தடுப்பணைகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அரசூர், முதலிபாளையம், பொத்தியாம் பாளையம், மோப்பிரிபாளையம் சுற்றுப்பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ