மேலும் செய்திகள்
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
11 hour(s) ago
நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை
11 hour(s) ago
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
11 hour(s) ago
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
11 hour(s) ago
ஊட்டி;நீலகிரியில் லோக்சபா தொகுதியில், 'பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., - நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள்,' என, 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 6 தொகுதிகளில், 1500க்கு மேற்பட்ட ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு சாவடிகளை தயார்படுத்தும் பணியை தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஓட்டு சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் சென்னையில் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரம், விவி., பேட்., கன்ட்ரோல்யூனிட், வாக்காளர் பட்டியல், வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் மை, பதிவேடு உட்பட, 90 வகையான பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில், 65 வகையான பொருட்கள் சென்னையில் கொள்முதல் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள பொருட்கள் விரைவில் வர உள்ளது. மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் பொருத்த கூடிய 'பேலட் சீட்' சென்னையில் அச்சடிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது.
ஓட்டு சாவடிகளில், பால்பேனா, பென்சில், குண்டூசி, நுால், ஊசி, சீல் வைப்பதற்கு அரக்கு, கம், பேஸ்ட், தீப்பெட்டி, பிளேடு, துணி, கிளிப், மெழுகு வர்த்தி, ரப்பர், ஸ்டாம்ப், ரப்பர் பேண்ட், செல்லோ டேப் வைக்கப்படும்.மேலும், கார்பன் பேப்பர், பிளாஸ்டிக் ஸ்கேல், பேக்கிங் பேப்பர், பூத் முகவர்களுக்கான பாஸ், கன்ட்ரோல் யூனிட் டேக், மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்திற்கான டேக், காலி கவர் உட்பட, 65 வகையான பொருட்கள் ஓட்டுப்பதிவு முந்தைய நாள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஓட்டு சாவடிக்கு அனுப்பப்படுகிறது.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago