மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
ஊட்டி:ஊட்டி அரசு கலை கல்லுாரியில் மாணவர்களிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், கல்லுாரி முன்னாள் முதல்வர்; பேராசிரியர் ஆகியோர் மீது, ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு கலை கல்லுாரியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லுாரியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், சில சமயங்களில் மதிப்பெண் அடிப்படையில் வேறு துறைகள் கிடைத்துவிடும். இதனால், கல்லுாரியில் சேர்ந்த பின், தங்களுக்கு பிடித்த துறைகளுக்கு மாற்றம் செய்கின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு இக்கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவிகள் சிலர் தாங்கள் படித்து கொண்டிருந்த துறைகளில் இருந்து வேறு துறைகளுக்கு தங்களை மாற்றி கொள்ள விருப்பம் தெரிவித்து, பேராசிரியராக இருந்த ரவி, கல்லுாரி முதல்வர் அருள் ஆண்டனி ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளனர்.அப்போது, அவர்கள் மாணவர்களை வேறு துறைகளுக்கு மாற்றம் செய்து கொடுப்பதற்காக, 5000 முதல 10 ஆயிரம்ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. சில மாணவர்கள் 'கூகுள் பே' மூலம் பணம் அனுப்பியுள்ளனர். இப்பிரச்னை தொடர்பாக ஏற்கனவே இவர்கள் இருவரை உயர் கல்வி துறை 'சஸ்பெண்ட்' செய்தது. இந்நிலையில், ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை தாங்களாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், ''ஊட்டி அரசு கலை கல்லுாரியில் மாணவர்கள்துறைகள் மாற்றம் செய்வதற்காக பேராசிரியர்களை அணுகியுள்ளனர். அப்போது, அவர்கள் துறைகளை மாற்றி கொடுப்பதற்காக பணம் பெற்றுள்ளனர். ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தங்களில், இந்த செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, ஊட்டி அரசு கலை கல்லுாரி முன்னாள் முதல்வராக இருந்த அருள் ஆண்டனி மற்றும் பேராசிரியர் ரவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025