மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
11 hour(s) ago
ஊட்டி : ஊட்டி அரசு கலை கல்லுாரியில், 8.2 கோடி ரூபாய் நிதியில் கட்டப்பட்டு வரும் பழைய கட்டடம் புதுப்பிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஊட்டி அரசு கலைக்கல்லுாரி கடந்த, 1955ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அப்போது, பழைய கட்டடத்தில் கல்லுாரி முதல்வர், அலுவலகம், தமிழ், கணிதம் உட்பட, 5 பாடப்பிரிவுகளுக்கான வகுப்பறைகள், நுாலகம் செயல்பட்டு வந்தது. தற்போது, இளங்கலை, முதுகலை, என, 4,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதில், 18 இளங்கலை, 12 முதுகலை, 7 ஆய்வு பிரிவு மற்றும் 8 உயர் ஆய்வு முனைவர் பட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, 200 ஆண்டுகள் பழமையான கட்டடத்தை புதுப்பிக்க, உயர்கல்வி மானிய கோரிக்கையில், 8.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பொது பணி துறை மூலம் கடந்த மூன்றாண்டுக்கு மேலாக பணிகள் நடந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிமெண்ட் பயன்படுத்தாமல் சுண்ணாம்பு கலவையை கொண்டு கட்டியுள்ளனர். அதேபோன்று பழமை மாறாமல் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக விரைவாக நடந்து வந்து கட்டட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
11 hour(s) ago