மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
23 hour(s) ago
மேட்டுப்பாளையம்:நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டுகள், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மண்டிகளில், ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படும். ஊட்டி பூண்டு நல்ல காரத்தன்மையும், மணமும் இருக்கும். அதனால் பெரும்பாலான மக்கள், இந்த பூண்டை விரும்பி வாங்குவர்.ஊட்டி பூண்டை, வடமாநில விவசாயிகள் விதைக்கு வாங்கி செல்வது வழக்கமாகி உள்ளது. தற்போது வடமாநில விவசாயிகள் வருகை அதிகரித்துள்ளதால், பூண்டு விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட பூண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாவட்ட பூண்டு வியாபாரிகள் சங்க தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:நீலகிரி பூண்டு அறுவடை சீசன், ஜூன் மாதம் இரண்டாம் வாரம் துவங்கியது. அக்டோபர் வரை, ஐந்து மாதங்களுக்கு அறுவடை நடக்கும். ஜூனில் ஒரு கிலோ ஊட்டி பூண்டு, 150 -- 250 ரூபாய் வரை விற்பனை ஆனது. பூண்டில் நல்ல காரத்தன்மை இருப்பதால், ஹிமாச்சல பிரதேசம், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில விவசாயிகள், விதைக்கு பூண்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.மேட்டுப்பாளையம் நகரில் உள்ள மண்டிகளில், ஒவ்வொரு வாரமும், 1,000 டன் பூண்டு விற்பனை ஆகிறது. மூன்று வாரங்களுக்கு முன், கிலோ 350 ரூபாய் வரை விற்பனையான இந்த ரக பூண்டு இந்த வாரம் அதிகபட்சமாக, 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அகில இந்திய அளவில் பூண்டு மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்வதால், இந்த விலை உயர்வு கிடைக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு இதே அளவில் விலை கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
23 hour(s) ago