குடும்பத்தினரை தவறாக பேசிய ஒருவர் கொலை
கூடலுார்:மேல் கூடலுார், கே.கே., நகரை சேர்ந்தவர் ராமசாமி,40. கூலி தொழிலாளியான அவர், ஆட்டோ டிரைவர் பேரின்பராஜன்,40, என்பவரின் சகோதரர் மனைவி குறித்து, தனது நண்பரிடம் தவறாக பேசியுள்ளார். இதுகுறித்து அறிந்த பேரின்பராஜன் மொபைல் போனில், ராமசாமியிடம் கேட்டு திட்டி உள்ளார்.தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை ராமசாமி வீட்டுக்கு சென்ற பேரின்பராஜன், இது குறித்து கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த, பேரின்பராஜன், தான் எடுத்து சென்ற, கத்தியால் அவரை வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த ராமசாமி, ஊட்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக, கூடலுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது வழக்கு பதிவு செய்து, பேரின்பராஜனை கைது செய்தார்.