மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
கோத்தகிரி;கோத்தகிரியில் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.சமுதாயம் சார்ந்த மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆலோசகர் லோபிதாசன் பேசுகையில்,''மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஆரம்ப நிலையில் தெரிந்து கொண்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி, குழந்தையின் குறைபாட்டின் தன்மையை அறிந்து, அதற்கேற்ப பயிற்சி அளிக்க வேண்டும்.அந்த மாணவர்களை தனிமை படுத்தாமல், ஏதாவது ஒரு வகையில், வெளியிடங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை காண உதவி செய்ய வேண்டும். பள்ளிகளில் அந்த குழந்தைகளுக்கான சாய்வுதள நடைபாதை மற்றும் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்வதுடன், சக மாணவர்களுடன் அமர்ந்து கல்வி கற்க வாய்ப்புகள் அளிக்க வேண்டும்,'' என்றார். இன்டாக்ட் நிறுவன மனநல பயிற்சியாளர் அரவிந்த் பேசுகையில்,''மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு குதிரையேற்றம், நீச்சல் மற்றும் ஸ்பீச் தெரபி போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவது அவசியம்.வேலைவாய்ப்பு பெற ஏதுவாக, 18 வயதுக்கு உட்பட்டோருக்கு, தொழில் பயிற்சி அளிப்பது முக்கியம். அவர்களது புரிதலுக்கு ஏற்ப கல்வி வழங்கி, வேலைவாய்ப்புகளில் பங்கெடுக்க வைப்பது அவசியம்,'' என்றார்.மேலும், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய அரசு நலத்திட்டங்களை பெறும் வழிமுறைகள் குறித்தும், மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருச்சி 'இன்டாக்ட்' நிறுவனம் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஐலண்ட் டிரஸ்ட் நிர்வாகி சாராள் நன்றி கூறினார்.
10-Oct-2025
10-Oct-2025