இரட்டிப்பு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
குன்னுார்;தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் கூறுகையில்,''சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (அமலாக்கம்) சார்பில், குன்னுார், ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், சுதந்திர தினத்தன்று, நிறுவனங்களில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்திய, 50 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.