உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தனியார் டாக்சி ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை வேண்டும்

தனியார் டாக்சி ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை வேண்டும்

ஊட்டி;நீலகிரி இளம் சுற்றுலா டாக்சி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலசங்கத்தினர், தீபக் தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி, 3,000க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உள்ளனர். தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து சில தனியார் டாக்சி ஓட்டுனர்கள் ஊட்டிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்களை நாங்கள் அடித்ததாக கூறி, பொய்யான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், சமீபத்தில் ஊட்டியில் இருந்து கோவை விமான நிலையம் சென்ற சுற்றுலா வாகன ஓட்டுனர்களை தனியார் நிறுவன டாக்சி ஓட்டுனர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாகன ஓட்டுனர்கள் கோவை போன்ற பகுதிகளுக்கு செல்லும்போது ஓட்டுனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். சம்பந்தப்பட்ட தனியார் டாக்சி நிறுவன வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி