| ADDED : ஜூலை 24, 2024 12:20 AM
மேட்டுப்பாளையம்;மின் கட்டணத்தை உயர்த்திய, தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வான்மதிசேட் தலைமை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.,வுமான அருண்குமார், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கி வருவதை நிறுத்த, தற்போதைய அரசு முயற்சிக்கிறது. சொத்து, குடிநீர் கட்டணங்களை உயர்த்தியதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்கறிகளின் விலைகளை அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.