உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அமைப்பு சாரா தொழிலாளர் ஆயுள் சான்று வரும் 30க்குள் சமர்ப்பிக்க அறிவுரை

அமைப்பு சாரா தொழிலாளர் ஆயுள் சான்று வரும் 30க்குள் சமர்ப்பிக்க அறிவுரை

ஊட்டி;அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆயுள் சான்றினை இம்மாதம், 30ம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு உள்ளிட்ட, 18 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள் அனைவரும், 2024- 2025ம் ஆண்டிற்கான ஆயுள் சான்றினை இம்மாதம், 30ம் தேதிக்குள் இணைய தளம் மூலம் சமர்பிக்க ேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் பெறும் குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்களுடைய ஆயுள் சான்றினை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, புகைப்படம் ஒன்று, வங்கி புத்தக நகல் மற்றும் நடப்பு மாதம் வரை வரவு, செலவு விபரம் ஆகிய ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும்.இவற்றை அருகில் உள்ள கம்ப்யூட்டர் மையம் மற்றும் இ--சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, 0423-- 2448524 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை