உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வழிகாட்டு நெறிமுறைகள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்: செலவின பார்வையாளர்கள் அறிவுரை

வழிகாட்டு நெறிமுறைகள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்: செலவின பார்வையாளர்கள் அறிவுரை

ஊட்டி;''தேர்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி லோக்சபா தொகுதி, ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவிநாசி ஆகிய, 6 தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த தொகுதிகளில், 6 லட்சத்து 83 ஆயிரத்து 21 ஆண் வாக்காளர்கள்; 7 லட்சத்து 35 ஆயிரத்து 797 பெண் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போது, கட்சியினரின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 'லோக்சபா தேர்தலை, தேர்தல் கமிஷன் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திட வேண்டும்,' என, தெரிவித்து வருகிறது.அதன்படி, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் செலவுகள் தொடர்பான தேர்தல் செலவின பார்வையாளர்கள் சந்தீப் மிஸ்ரா மற்றும் கிரண் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள், முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், சந்தீப் மிஸ்ரா பேசுகையில், ''நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்திய தேர்தல் கமிஷனால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து தேர்தல் தொடர்பான செலவுகளும் கண்காணிக்கப்படும். அனைத்து செலவுகளையும் முறையாக தேர்தல் செலவின கணக்கீட்டு குழுவிடம் சமர்பிக்க வேண்டும். எந்தவொரு ஒளிவுமறைவின்றி தாங்கள் மேற்கொள்ளும் செலவுகளை மேற்கண்ட குழுவிடம் சமர்பிக்க வேண்டும்,'' என்றார்.கிரண் பேசியதாவது, ''லோக்சபா தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் தொடர்ந்து, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இனியும் இந்த கண்காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும். தேர்தல் தொடர்பான ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை நல்ல முறையில் நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை