| ADDED : ஜூன் 21, 2024 12:32 AM
பந்தலுார்;பந்தலுார் பஜார் சாலையில் கால்நடைகள் உலா வருவதால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.தமிழகம்; கேரளா மற்றும் கர்நாடகா மாநில வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் அதிக அளவில் வந்துச்செல்லும் பகுதியாக பந்தலுார் உள்ளது. பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி, கல்லுாரி களுக்கு செல்லும் மாணவர்கள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில், இந்த பகுதியில் கால்நடை வளர்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளை திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். கால்நடைகள் பஜார் சாலையில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் வருவோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையில் கால்நடைகளை உலாவிடும் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.