| ADDED : மே 22, 2024 12:19 AM
பந்தலுார்:பந்தலுார் பஜாரில் நெல்லியாளம் நகராட்சி மூலம் அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தினசரி சம்பளமாக கணக்கிடப்பட்டு, மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக சம்பளம், வழங்கப்படாத நிலையில், பணியாளர்கள் தங்கள் குடும்ப செலவுகளுக்கு பணம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது, பள்ளி திறக்க உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளுக்கு சீருடை மற்றும் பள்ளி சேர்க்கை போன்றவற்றை மேற்கொள்ள இயலாமல், பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம், முறையிட்டும் தீர்வு காணப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வு செய்து உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.