உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரி கைது; சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை

தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரி கைது; சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை

கூடலுார் : கூடலுார் அருகே, தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.கூடலுார் ஹெல்த்கேம் பகுதியில் சாலையோரம் சத்தியராஜ், 25, என்பவர், தள்ளு வண்டியில் டீ மற்றும் டிபன் வியாபாரம் செய்து வந்தார். இவர், கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கடந்த, 26ம் தேதி போலீசார் கடையில் சோதனை செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கூடலுாரை சேர்ந்த வர்கீஸ், 30, என்பவரை கைது செய்தனர். சத்தியராஜ் தலைமறைவானார்.எஸ்.ஐ., கபில்தேவ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், சத்தியராஜ் கைது செய்யப்பட்டார்.போலீசார் கூறுகையில், 'மீண்டும் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க, அப்பகுதியில் சாலையோர கடைகளை அகற்ற, நகராட்சி கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் கடைகள் அகற்றப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை