சீரமைக்காத நடைபாதை வழுக்கி விழும் அவலம்
கோத்தகிரி;கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் இருந்து, குன்னுார் பஸ் நிறுத்தத்திற்கு செல்லும் நடைபாதை, சீரமைக்கப்படாமல் உள்ளதால், வழுக்கி விழும் அவலம் தொடர்கிறது.கோத்தகிரி கட்டபெட்டு பஜார், மக்கள் நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. பஜாரில் இருந்து, கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நடைபாதையில் நடந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. படிக்கட்டுகள் நிறைந்த செங்குத்தாக அமைந்துள்ள குறிப்பிட்ட நடைப்பாதை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், படிக்கட்டுகளில் பாசி படர்ந்துள்ளது. மேலும், குடிநீர் குழாய்கள் நடைபாதையின் மேல் இடையூறாக பொருத்தப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு படிக்கட்டுகளும் உள்ளன.இதனால், நடந்து செல்பவர்கள் ஏராளமானோர் வழுக்கி விழும் அவலம் தொடர்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.