உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பல ஆண்டு கோரிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

பல ஆண்டு கோரிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

அன்னுார் : பல ஆண்டு கோரிக்கைகள் பட்ஜெட்டில்அறிவிக்கப்படுமா? என அன்னுார் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இந்த கூட்ட தொடரில் கோவை புறநகர் மக்களின் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அன்னுார் மக்கள் கூறியதாவது : பவானி ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்தவுடன் அத்திக்கடவு -அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் கடந்த ஆறு மாதங்களாக கூறி வந்தனர்.தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனாலும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்த திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்த அறிவிப்பை இந்த கூட்டத்தில் வெளியிட வேண்டும். செல்லப்பம் பாளையம், கஞ்சப்பள்ளி நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக தரமுயர்த்த வேண்டும்.கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் குரும்பபாளையத்தில் துவங்கி கோவில் பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி வழியாக கர்நாடக எல்லை வரை புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. 926 ஏக்கர் நிலம் இதற்காக முடக்கி வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இது வரை பணி துவங்கவில்லை.தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைக்காததால் புறவழிச்சாலை திட்டம் முடங்கிக் கிடக்கிறது. அன்னுார் கிளை நூலகம் தாலுகா நூலகமாக தரம் உயர்த்தப்படவில்லை.அன்னுார் அரசு மருத்துவமனையை போஸ்ட் மார்ட்டம் வசதியுடன் கூடிய நூறு படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்த அன்னுார் மக்கள் 10 ஆண்டுகளாக கோரி வருகின்றனர். ஆனால் தரம் உயர்த்தப்படவில்லை. அன்னுார் தாலுகாவில் அதிக அளவில் ஸ்பின்னிங் மில்கள் பவுண்டரிகள் தொழிற்சாலைகள் உள்ளன. எனவே அன்னுாரை தலைமையிடமாக கொண்டு மின் வாரிய கோட்டம் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் குறித்து இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறுஅன்னுார் மக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை