உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிளாஸ்டிக் பொருட்கள் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை பந்திப்பூர் புலிகள் காப்பக நிர்வாகம் நடவடிக்கை

பிளாஸ்டிக் பொருட்கள் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை பந்திப்பூர் புலிகள் காப்பக நிர்வாகம் நடவடிக்கை

கூடலுார்;நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும்; பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.வருவாய் துறையினர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து, அபராதமும் விதித்து வருகின்றனர்.வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருவதை தடுக்க, கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில், வாகனங்களை சோதனை செய்து, அவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.கர்நாடகாவில் இருந்து, நீலகிரிக்கு வரும் வாகனங்களை, முதுமலை புலிகள் காப்பகம், அருகே- கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடியில் சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், முதுமலையை ஒட்டிய கர்நாடக பந்திபூர் புலிகள் காப்பக வனப்பகுதியிலும், பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை முதுமலை ஒட்டிய பந்திப்பூர் சோதனை சாவடியில், சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.கர்நாடகா வனத்துறையினர் கூறுகையில்,'இவ்வழியாக பயணிக்கும் ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்தில் வீசி செல்வதால், வானத்துக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க, பந்திப்பூர் நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களை சோதனை செய்து, பிளாஸ்டிக் பொருள்கள் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ