உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அருவங்காட்டில் கரடிகள் நடமாட்டம்

அருவங்காட்டில் கரடிகள் நடமாட்டம்

குன்னுார்:குன்னுார் அருவங்காடு, பழைய அருவங்காடு, கிடங்கு, காமராஜர் நகர், ஆரோக்கிய புரம், உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் உள்ளது.இந்நிலையில், ஆரோக்கியபுரம் பகுதியில் குடியிருப்பு தடுப்பு சுவர் மீது ஏறி குதித்து சென்றது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே அத்தியாவசிய பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதே போல, பழைய அருவங்காடு சாலையில் அதிகாலை நேரத்தில் கரடிகள் உலா செல்வதால் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே, இவற்றை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை