மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
பந்தலுார்;பந்தலுார் அருகே உள்ள ரேஷன் கடையில், இணைய தள சேவை முடக்கம் ஏற்பட்டதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டனர்.பந்தலுார் அருகே கொளப்பள்ளி பகுதியில், நடப்பு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க காலை, 6:00 மணி முதல் ரேஷன் கடையில் நுகர்வோர் காத்திருந்தனர். ரேஷன் கடை, 9:00 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், இணையதள சேவையில் முடக்கம் ஏற்பட்டதால் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், காலையில் வேலைக்கு செல்லாமல், உணவு உட்கொள்ளாமலும் வந்த மக்கள் காத்திருந்து சோர்வடைந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.வட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக, இணையதள சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரிப்படுத்தும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். சேவை சரிசெய்யப்பட்டால் அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படும்,' என்றார்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025