மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
3 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
3 hour(s) ago
பந்தலுார்:பந்தலுார் பகுதியில் தடுப்பணைகள் உடைந்து காணப்படுவதால், தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் சதுப்பு நிலங்கள் மற்றும் தேயிலை தோட்டங்கள், நீரோடை செல்லும் பகுதிகளில், தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பல்வேறு துறைகள் சார்பில், தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணைகள் போதிய தரம் இன்றி கட்டப்பட்டதால், கட்டிய சில ஆண்டுகளில் உடைந்து கற்கள் பெயர்ந்து விரிசல் அடைந்து காணப்படுகிறது.இதனால், தண்ணீர் தேங்கி நிற்காமல் வீணாகி வெளியேறி வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தரமற்ற முறையில் கட்டப்பட்ட தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல், வெளியேறி வருவதால் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் உருவாகி வருகிறது.எனவே, இப்பகுதியில் ஆய்வு செய்து தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க வேண்டும்.
3 hour(s) ago
3 hour(s) ago