உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஸ் நிலைய பார்க்கிங் தளம்: வாகனம் நிறுத்துவதில் சிக்கல்

பஸ் நிலைய பார்க்கிங் தளம்: வாகனம் நிறுத்துவதில் சிக்கல்

கோத்தகிரி;கோத்தகிரி பஸ் நிலையத்தில், விரயமாக வைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பஸ் நிலையத்தில், 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' தளம் உள்ளது. இந்த குறிப்பிட்ட இடத்தில், சிறிய குழி ஏற்பட்டுள்ளதால், குறிப்பிட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்த முடியாமல், போலீசார் 'பேரிகார்டு' வைத்துள்ளனர்.இதனால், உள்ளூர் வாகனங்களை 'பார்க்கிங்' செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, போக்குவரத்து போலீசார், அபராதம் விதித்து வருகின்றனர்.கடைகளில் இருந்து, பொருட்கள் வாங்குவதற்காக, சிறிது நேரம் வாகனங்களை நிறுத்தினாலும், அபராதம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.இதனால், பெரும்பாலான உள்ளூர் வாகன ஓட்டுனர்கள், தண்டத்திற்கு தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, பேரூராட்சி நிர்வாகம், சிறிய குழியை மூடும் பட்சத்தில், இப்பகுதியில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய இது ஏதுவாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை