உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆனைகட்டி கிராமத்தில் முகாம்; 43 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ஆனைகட்டி கிராமத்தில் முகாம்; 43 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கூடலுார் : மசினகுடி, ஆனை கட்டியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 43 பயனாளிகளுக்கு 17.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.முதுமலை, மசினகுடி ஆனைகட்டியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில், மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பேசுகையில், ''பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி நன்றாக படிக்க வைக்க வேண்டும். பழங்குடி மாணவர்கள் பள்ளிப்படிப்புடன் நிறுத்தி விடாமல், மேற்படிப்பு படித்து சாதிக்க வேண்டும். இப்பகுதியில் ஆரம்ப சுகாதாரம் நிலையம், மொபைல் டவர், பகுதி நேர நியாய விலை கடை அமைக்கவும், இங்குள்ள அறுபது குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் அரசு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். முகாமில், 43 பயனாளிகளுக்கு, 17.36 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரசு துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ