உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குளிரான காலநிலை: சுற்றுலா தலங்கள் வெறிச்

குளிரான காலநிலை: சுற்றுலா தலங்கள் வெறிச்

ஊட்டி;ஊட்டியில் நிலவும் குளிரான கால நிலையால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக மழை சற்று ஓய்ந்தாலும் குளிரான காலநிலை நிலவுகிறது. மழை பெய்த நாளிலிருந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக குறைந்தது.ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக, அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிடுவது வழக்கம். ஆனால், ஊட்டியில் குளிரான காலநிலை நிலவுவதால் அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. சொற்ப அளவில் வரும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளை அணிந்து சுற்றுலா தலங்களை ரசிக்க வருகின்றனர்.ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் சர்வதேச சுற்றுலா அந்தஸ்து பெற்ற, அரசு தாவரவியல் பூங்காவுக்கு சென்று மலர்களை ரசித்து செல்கின்றனர். பூங்காவில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் கடந்த, 6 மாதங்களுக்கு மேலாக செயலிழந்துள்ளது. பூங்கா குறித்த தகவல்களை பெற முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை