உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதிய பாலம் அமைத்தும் பயனில்லை; சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் சிக்கல்

புதிய பாலம் அமைத்தும் பயனில்லை; சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் சிக்கல்

பந்தலுார்;பந்தலுார் பஜாரில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பாலம் பயனில்லாமல் உள்ளதால், சாலையில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பந்தலுார் பஜார் பகுதி தாலுகா தலைநகராகவும், தமிழக- கேரளா இணைப்பு சாலையாகவும் உள்ளது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து, குறுகிய சாலையாக மாறி உள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாத நிலையில், சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். மழை காலங்களில் மழை நீர் வழிந்தோடவும், குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்கள் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லவும், நெல்லியாளம் நகராட்சி மூலம், நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாய், பாதி அளவு அமைக்கப்பட்டதால், பயன் இல்லாமல் உள்ளது.மேலும், மழைநீர் மற்றும் கழிவு நீர் வழிந்தோட சாலையின் குறுக்கே இருந்த குறுகலான கால்வாயை, அகற்றி அகலமான கால்வாய் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை மூலம், 15 லட்சம் ரூபாய் செலவில் சாலையின் குறுக்கே கால்வாய் அமைக்கப்பட்டது.ஆனால், அந்த கால்வாயில் சாலையில் உள்ள மழை நீர் செல்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், மழை நீர் முழுவதும் சாலையில் நிறைந்து நிற்கிறது. அத்துடன் கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி, ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடம் கட்டப்பட்டு உள்ளதால், தண்ணீர் வடிந்தோட வழி இல்லாத நிலை உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி