மேலும் செய்திகள்
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை எதிர்த்து மறியல் போராட்டம்
58 minutes ago
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
59 minutes ago
கூடலுார்;முதுமலையில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தடையின்றி மின் சப்ளை செய்ய வசதியாக தொரப்பள்ளி-தெப்பக்காடு இடையே, மின் கேபிள் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம் அபயாரண்யம், கார்குடி, தெப்பக்காடு பகுதி குடியிருப்புகளுக்கு, தொரப்பள்ளியில் இருந்து, மின் கம்பிகள் மூலம் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. கம்பிகள் வனப்பகுதி வழியாக செல்வதால், மரக்கிளைகள் மின்கம்பிகளில் மீது விழுந்து அடிக்கடி மின் சப்ளை துண்டிக்கப்படுகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தொரப்பள்ளி -தெப்பக்காடு இடையே, கேபிள் மூலம் மின்சாரம் சப்ளை செய்ய வனத்துறை சார்பில், 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த மாதம் பூஜையுடன் துவங்கப்பட்டது. மின்கம்பங்கள் நடவு செய்யும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, இவ்வழித்தடத்தில், மின் கேபிள் அமைக்க வசதியாக இயந்திரம் மின் கம்பங்கள் நடவு செய்யும் பணியை துவங்கி உள்ளனர். தொடர்ந்து அதில் மின் கேபிள்கள் அமைக்கப்படும்.அதிகாரிகள் கூறுகையில், 'முதுமலை வனப்பகுதி வழியாக செல்லும், மின் கம்பிக்கு மாற்றாக, கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு சொல்வதற்காக பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதன் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'இதே போன்று, கூடலுார், பந்தலுார் வனப்பகுதி வழியாக செல்லும் மின் கம்பிகளுக்கு மாற்றாக, கேபிள் மூலம் மின் சப்ளை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி மின் சப்ளை தடைப்படுவதையும் தவிர்க்க முடியும்,' என்றனர்.
58 minutes ago
59 minutes ago