உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒன்னதலை--கோவில்மேடு சாலை சேதம்; போக்குவரத்து பாதிப்பு

ஒன்னதலை--கோவில்மேடு சாலை சேதம்; போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி : கோத்தகிரி ஒன்னதலை -கோவில்மேடு இடையே சாலை சேதமடைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னதலை கிராமத்தில் இருந்து, கோவில்மேடு வழியாக பில்லிக்கம்பைக்கு இணைப்பு சாலை உள்ளது.ஒரு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இச்சாலையை பள்ளி மாணவர்கள், விவசாயிகள் உட்பட நுாற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். தவிர, பில்லிக்கம்பையில் அமைந்துள்ள பள்ளி, வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இச்சாலை சீரமைக்கப்படாமல் சேதமடைந்துள்ளது. மழை காலங்களில் சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளில் தண்ணீர் நிறைந்து விடுவதால், மக்கள் சென்று வருவதில் இடையூறு அதிகரித்துள்ளது. பள்ளி வாகனங்கள் உட்பட இதர தனியார் வாகனங்கள் இச்சாலையை சிரமத்திற்கு இடையே, கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையை விரைந்து சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை